பயிர் பாதுகாப்பு :: மரக்கொல்லி

மரக்கொல்லி :

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் (கோயமுத்தூர்) ஒரு தனிச்சிறந்த கண்டுபிடிப்பு ஆகும். இந்த மருந்தானது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விவசாயத் தொலை தொடர்பு மையத்தில் விற்கப்படுகின்றது.

இந்த மரக்கொல்லியானது முழுவதுமாக கோவில், கட்டிடம், சுற்றுச் சுவர், கிணறு, வாய்க்கால் ஓரம் ஆகியவற்றில் உள்ள தேவையற்ற மரங்கள் மற்றும் செடிகளை அழிக்கின்றது.

பட்டையை நீக்குதல் மரக்கொல்லியை வெட்டிய பாகத்தில் தடவவும் பழைய துணியால் கட்டவும்

பட்டை நீக்குதல் மரக்கொல்லியை நடவுதல் துணியால் கட்டுதல் பயன்படுத்தும் முறை :       

  1. மரம் / செடியின் அடிப்பகுதியின் மேற்புற பட்டையை சுமார் 10 செ.மீ உயரம் அளவிற்கு மண்பகுதியிலிருந்து வெட்டி நீக்கிவிடவும்
  2. வெட்டியப் பகுதியில் மரக்கொல்லியை உடனடியாக அதாவது வெட்டிய பாகத்தில் உள்ள ஈரப்பதம் குறைவதற்குள் தடவவும்
  3. தடவிய பின்பு ஒரு பயன்படாத பழைய துணியால் மருந்து தடவிய பாகம் முழுவதும் கவரும் வகையில் கட்டவும். பின்பு மறுபடியும் ஒரு முறை கட்டிய துணியின் மேல் மருந்தை தடவவும்
  4. இவ்வாறு ஒரு மரம் / செடிக்கு ஒருமுறை செய்தால் போதுமானது.

முன் எச்சரிக்கை :

  1. இந்த மரக்கொல்லி மிகவும் அதிகமான விஷத்தன்மையைக் கொண்டது எனவே கவனமாக கையாளவும்.
  2. உடலில் படாதவாறு பார்த்துக்கொள்ளவும்.
  3. குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் பாதுகாக்கவும்.
  4. பயன்படுத்திய டப்பாக்களை எரித்துவிடவும்.

மருந்து கிடைக்குமிடம் :

இந்த மரங்கொல்லி கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வேளாண்மை தொழில்நுட்ப தகவல் மையத்தில் விற்பனைக்குள்ளது. 250 மில்லி மருந்தின் விலை ரூ.200 ஆகும். தேவைப்படுவோர் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

விபரங்களுக்கு :

பேராசிரியர் மற்றும் தலைவர்                                     
பயிர் நோயியல் துறை                                                  
பயிர் பாதுகாப்பு மையம்                                   
கோவை – 641 003
தொலைபேசி – 0422 – 6611226

பேராசிரியர் மற்றும் தலைவர்
வேளாண்மை தொழில்நுட்பத் தகவல் மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
விரிவாக்கக் கல்வி இயக்ககம்
கோவை – 641 003
தொலைபேசி  - 0422 - 6611315

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015